Wednesday, March 14, 2012

சென்னைக் காவல் துறை: பதிலளிக்க வேண்டிய கேள்விகள்


சென்னையில் நடந்த வங்கிக் கொள்ளைகளை அடுத்து, கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்ள் ஐவரைச் சென்னைக் காவல் துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மோதலில் நடந்த கொலை என்று சொல்லப்படும் இந்தக் கொலைகள் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. ஐந்து பேரும் குற்றவாளிகள்தானா என்று உறுதிப்படுத்தாமலே அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாகச் சொல்வது சந்தேகங்களை எழுப்புகிறது.
தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்துச் சென்னை டி.ஜி.பி.க்கும் மாவட்ட ஆட்சியருக்கும்  நோட்டீஸ் அனுப்பியது. அந்த அளவுக்குத் தீவிரமான இந்தப் பிரச்சினை குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான சில கேள்விகளை இங்கே தருகிறோம். 
 நள்ளிரவு 1 மணிக்குத் துவங்கிய துப்பாக்கிச் சண்டை 1.15 வரை நீடித்ததாக போலீஸ் சொல்கிறது. சுவற்றில் 10 இடங்களில் குண்டு பாய்ந்த சுவடுகள் உள்ளன. வீட்டுக்குள் கதவை உடைத்து போலீஸ் நுழைந்திருக்கிறது. எவ்வளவு சத்தம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் சுற்று வட்டாரத்தில் இருந்த எவருக்கும் ஏன் துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை?
 ஒரு ஜன்னல் க்ரில் வழியாக முதல் ரவுண்டைச் சுட்டதாக போலீஸ் சொல்லியிருக்கிறது. வெறும் 9 செ.மீ அகலம் மட்டுமே உள்ள அந்தத் துளை வழியாக நிச்சயம் கையை விடவே முடியாது. அதுவும் துப்பாக்கி ஏந்திய கையை விட முடியாது. எனவே வெளியே இருந்து தான் சுட்டிருக்க முடியும். ஆனால் நள்ளிரவில் 9 செமீ அகலத் துளை வழியாக ஜன்னல் கம்பிகளில்கூடப் படாமல் சுட்டோம் என்று கூறுவதை நம்ப முடியவில்லை. துப்பாக்கிக் குண்டுகள் ஜன்னலில் பட்ட தடயம் எதுவும் இல்லை.
 ஜன்னல் வழியாகச் சுட்டுவிட்டு அதன் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று என்கவுண் டரைத் தொடர்ந்ததாக போலீஸ் சொல்கிறது. ஆனால் உடைக்கப்பட்டதற்கான அடையாளம் கதவிலோ, தாழ்பாள்களிலோ இல்லை.
 போலீஸ் தரப்பில் இருவருக்குக் காயம். கொள்ளையர்கள் சுட்டதால்தான் தற்காப்புக்காக நாங்கள் சுட்டோம் என்கிறது போலீஸ். ஆனால் வீடு பூட்டியிருந்தது. முதலில் ஒரு ரவுண்டு சுட்டோம். அதற்குப் பின் கேட்டை உடைத்துத்தான் உள்ளே சென்றோம் என்கிறது அதே போலீஸ். வெளியே எட்டிப் பார்க்கக்கூட சிரமமான ஒரு சிறிய பூட்டப்பட்ட அறைக்குள் இருந்தவர்கள் வெளியில் இருந்த போலீசை எப்படிச் சுட்டிருக்க முடியும்?
 பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்கள்தான் முதலில் சுட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும், பூட்டியிருந்த வீட்டுக்குள் பதுங்கியிருப் பவர்களை எளிதாக மடக்கியிருக்கலாமே.. வீட்டின் மொத்தப் பரப்பே 300 சதுர அடிதான். அதில் ஒரு சிறிய அறைக்குள்தான் கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள். கதவைத் திறந்து அவர்கள் தப்பி ஓடுவதற்கு இருந்த ஒரே வழியும் குறுகலான சிறிய பாதைதான். போலீஸ் எளிதாக அவர்களை மடக்கியிருக்க முடியும். 
 வங்கி சிசிஜிக்ஷி காமிராவில் சிக்கியவர், காமிராவில் அணிந்திருந்த அதே உடையில் இறந்து கிடந்தார். மற்றவர்கள் கொள்ளை யர்கள் என்பதை போலீஸ் எப்போது உறுதி செய்தது? சுடுவதற்கு முன்பா? பின்பா?
 தேடுதல் வேட்டை நிச்சயம் என்கவுண்டரில்தான் முடியும் என்று எதிர்பார்த்துச் செயல்பட்டது போல இருக்கிறது. மதியம் வரை அவர்களிடம் பொம்மைத் துப்பாக்கிதான் இருந்தது என்று கூறிய போலீஸ், அவர்களிடம் உண்மைத் துப்பாக்கி இருப்பதை எப்போது அறிந்தது?

No comments:

Post a Comment